விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்.. சாகசம் செய்ய முயன்ற சிறுவன் படுகாயம்..!

  • IndiaGlitz, [Saturday,June 22 2024]

இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்றாலும் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட துக்க சம்பவம் காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் முடிந்தால் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்றும் சமீபத்தில் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் இந்த அறிக்கையை பொருட்படுத்தாமல் பல விஜய் ரசிகர்கள் இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர் என்பதும் அவரது ரீ ரிலீஸ் படங்களை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது. இந்த சாகச நிகழ்ச்சியில் ஒரு சிறுவனின் கைகளில் தீயை பற்ற வைத்து ஓடுகளை உடைக்க முற்பட்டபோது சிறுவனின் கை முழுவதும் திடீரென தீ பரவியது.

அந்த தீயை அணைக்க முற்பட்டவர் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோல் சிந்தியதால் அந்த பகுதி முழுவதும் தீ பரவியது. இந்த சம்பவத்தில் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் அறிவுறுத்தியும் இதுபோன்ற சாகசங்கள் நிகழ்த்தி விபரீதத்தை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

 
 

More News

5 ஹீரோயின்களுடன் புலவர் புலமைப்பித்தன் பேரன் நடிக்கும் படம்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை

தளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள்.. வாழ்த்து சொன்ன அரசியல் பிரபலங்கள்..!

தளபதி விஜய் இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த குடையின் கீழ் இருந்த நடிகை இவர் தான்.. 'கோட்' ரகசியத்தை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது..

அஜர்பைஜான் சென்றது இதற்குதானா? அஜித்தின் கார் ரேஸ் வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக அஜித்துக்கு உட்பட படக்குழுவினர் அனைவரும் சமீபத்தில் அஜர்பைஜான் சென்றனர் என்பதையும்

சமயம் வந்துவிட்டது.. இறைவனின் உயிர் தங்கள் கருவில் உள்ளது: 'கல்கி 2898 ஏடி' டிரைலர்..!

பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி' திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு 5 நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ள மிரட்டல் டிரைலர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.