வேலூர் பட்டாசு கடையில் விபத்து… 2 குழந்தைகளுடன் முதியவர் உயிரிழந்த சோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வேலூர் மாவட்டம் லத்தேரி எனும் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்தக் கடையில் இருந்த உரிமையாளர் தன்னுடைய 2 பேரக் குழந்தைகளுடன் உயிரிழந்த சோகச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. மேலும் அந்தக் கடை முழுவதும் தீக்கிரையாகியதோடு அங்கிருந்த அனைத்து இருசக்கர வாகனங்களும் எரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
லத்திதேரி பகுதியில் மோகன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். இந்தக் கடைக்கு பட்டாசு வாங்க வந்த 2 வாடிக்கையாளர்கள் பட்டாசை சோதனை செய்ய விரும்பி இருக்கின்றனர். இதனால் சில பட்டாசுகளை கடை உரிமையாளர் மோகனும் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறார். இதை வாங்கிக்கொண்ட அந்த நபர்கள் கடைக்கு முன்னாடி வைத்தே பட்டாசை வெடிக்க வைத்துள்ளனர். இதில் இருந்து சிதறிய சில துளி நெருப்பு சில வினாடிகளில் கடைக்குள் இருந்த ஒட்டுமொத்த பட்டாசையும் வெடிக்க வைத்து இருக்கிறது.
இதனால் கடைக்குள் இருந்த உரிமையாளர் மோகன் மற்றும் அவருடைய 2 பேரக்குழந்தைகள் தனுஷ், தேஜஸ் ஆகிய மூவரும் ஒரு சில நிமிடங்களில் உடல் கருகி உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து அப்பகுதியை ஆய்வு செய்த அம்மாவட்ட ஆட்சியர் பட்டாசு கடைகளுக்கு கடுமையான விதிமுறைகளைப் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் பட்டாசு வாங்க சென்றவர்களால் 2 குழந்தைகள் உட்பட முதியவர் உயிரிழந்த சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout