பிக்பாஸ் நடிகை மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார்: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்ற பிரபல நடிகை ஒருவர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தெலுங்கு ’பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஸ்ரீமுகி. இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமன்றி தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ஸ்ரீமுகிதான் வெற்றி பெறுவார் என அனைவரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இரண்டாமிடம் பெற்றார். இருப்பினும் இவருக்கு அந்த நிகழ்ச்சியால் ரசிகர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை தேடிப்பிடித்து நடிகை ஸ்ரீமுகி மீது ஒருவர் தற்போது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து நடிகை ஸ்ரீமுகி கூறியபோது ’அந்த நிகழ்ச்சியில் அப்போது நான் என்ன பேசினேன் என்பதே எனக்கு நினைவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றுக்கு இப்போது ஏன் வழக்குப்பதிவு செய்கிறார்கள் என்று தனக்கு தெரியவில்லை என்றும் அது ஒரு நகைச்சுவையான நிகழ்ச்சி என்றும் அந்த நிகழ்ச்சியில் யார் மனதையாவது புண்படுத்தும்படி பேசியிருந்தால் தான் மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருப்பதாகவும் ஸ்ரீமுகி தெரிவித்திருந்தார். இருப்பினும் நடிகை ஸ்ரீமுகி மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்திருப்பது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com