ரிபப்ளிக் டிவி அர்னாப் மீது எப்.ஐ.ஆர்! ஏன் தெரியுமா?
- IndiaGlitz, [Monday,May 07 2018]
ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஊடகங்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இண்டீரியர் டிசைனர் ஒருவர் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மரணம் அடைந்தவர் எழுதி வைத்த கடிதத்தில் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அன்வாய் மாலிக் என்பவர் மற்றும் அவரது தாய் குமுத் என்பவரும் சமீபத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர். அன்வாய் மாலிக் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பில்தொகையை கொடுக்காமல் அர்னாப் அலைக்கழித்த்ததாகவும், அதனால் மனமுடைந்த அனவாய் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது மனைவி போலீசாரிடம் வாக்குமூலம் கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ரிபப்ளிக் தொலைக்காட்சி மறுத்துள்ளது. இண்டீரியர் டிசைனுக்கான மொத்த பணமும் காண்ட்ராக்டர்களிடம் கொடுத்துவிட்டதாகவும், இது பொய்யான குற்றச்சாட்டு என்றும் இந்த குற்றச்சாட்டை பரப்புபவர்கள் மீது தாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ரிபப்ளிக் டிவியின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.