கொரோனா விதிமுறைகளை மதிக்காத திருமணம்… ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!

  • IndiaGlitz, [Friday,April 30 2021]

சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் நேற்று 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனால் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத அந்த திருமண மண்டபத்திற்கு ரூ.90 ஆயிரமும் திருமணத்தை நடத்திய தம்பதிகளுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை அடுத்து தமிழகத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. அதோடு கடந்த 26 ஆம் தேதி முதல் திருமண நிகழ்வுகளில் 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி, பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடு, கோவில் விழாக்களுக்கு கட்டுப்பாடு எனப் பல்வேறு விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்த விதிமுறைகளை மீறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்பது போன்ற பல்வேறு கடுமையான எச்சரிக்கையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் திருமண விழாக்களில் விதிமுறைகளை மீறிப் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தை அடுத்து திரிபுரா மாநிலத்தின் ஒரு மாவட்ட ஆட்சியர் நேரில் சோதனை மேற்கொண்டு திருமண தம்பதிகளையே கைது செய்த சம்பவமும் அரங்கேறியது. தற்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறி நடக்கும் திருமண விழாக்களை கூர்ந்து கவனித்து உரிய நபர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள எம்.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விவகாரம் தொடர்பாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 17,897 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் ஒரேநாளில் 107 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது.

More News

கோவேக்சின் விலையை குறைத்த பாரத் நிறுவனம்....! நல்ல செய்திப்பா...!

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைத்ததை தொடர்ந்து, கோவேக்சின் தடுப்பூசியின் விலையையும் நிறுவனம் குறைத்துள்ளது. 

மபி...யில்  ஒரு அதிசியம்.....! கொரோனாவே  இல்லாத கிராமம்...! 

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.வி.ஆனந்த் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது 

தமிழ் திரையுலகின் சீனியர் நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் திரை உலகிற்கு கடந்த சில நாட்களாக போதாத காலம் என்பதால் பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்

வதந்தியை நம்பி மூக்கில் எலுமிச்சை சாறு செலுத்திய ஆசிரியர் பரிதாப பலி!

மூக்கு வழியே எலுமிச்சைசாறு செலுத்தினால் ஆக்சிஜன் அளவு அதிகம் கிடைக்கும் என்ற வதந்தியை நம்பி ஆசிரியர் ஒருவர் மூக்கு வழியே எலுமிச்சைசாறு செலுத்தியதால் பலியான சம்பவம்