ரஜினி மீது புகார் கொடுத்த சினிமா ஃபைனான்சியர் குண்டர் சட்டத்தில் கைது

  • IndiaGlitz, [Wednesday,August 02 2017]

சினிமா ஃபைனான்சியர் போத்ரா என்றால் தமிழ் திரையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்ன பட்ஜெட் படம் முதல் சூப்பர் ஸ்டார் படம் வரை ஃபைனான்ஸ் செய்தவர். இவர் அதிக வட்டி வசூலிப்பதாகவும், கொடுத்த பணத்தை மிரட்டி வசூலிப்பதாகவும் ஏற்கனவே இவர் மீது பல புகார்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவதுண்டு. மேலும் ரஜினிகாந்த், கஸ்தூரிராஜா உள்பட பல முன்னணி திரையுலகினர்களை இவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தி.நகரில் உள்ள ஓட்டல் நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஃபைனான்சியர் போத்ரா மற்றும் அவரது இரு மகன்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். போத்ரா கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது நகை வியாபாரிகள் உள்பட பலர் துணிச்சலுடன் புகார் கொடுத்ததை அடுத்து தற்போது போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனரின் இந்த துணிச்சலான நடவடிக்கையை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில் போத்ராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்ததை அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.