ஃபைனான்சியர் போத்ரா குடும்பத்தினர்களின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்: போலீஸ் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்களையும், தொழிலதிபர்களையும் மிரட்டி வந்த ஃபைனான்சியர் போத்ரா சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில், காவல்துறையினர் போத்ராவின் அலுவலகத்தை சோதனை நடத்தியதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக போத்ரா குடும்பத்தினர்களின் 6 வங்கிக்கணக்குகள் போலீசாரால் அதிரடியாக முடக்கப்பட்டது. இதில் போத்ரா மற்றும் அவரது இரண்டு மகன்களின் வங்கிக்கணக்குகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
போத்ரா மற்றும் அவரது மகன்கள் ஜாமீன் பெற முயற்சி செய்து வருவதால் போலிசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com