அன்புச்செழியன் முன்னிலையில் 'திமிர் பிடிச்சவன்'

  • IndiaGlitz, [Friday,February 09 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர், இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் அவர் மீதான நடவடிக்கையும் போலீசாரால் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் அடுத்த படமான 'திமிறு பிடிச்சவன்' என்ற படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் பூஜையில் பைனான்சியர் அன்புச்செழியன் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கணேஷா என்பவர் எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பேதுராஜ் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'ஒருநாள் கூத்து', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

More News

பேட்மேன் ரிலீஸ் எதிரொலி: பெண்களுக்கு சத்யம் திரையரங்கின் சிறப்பு சேவை

பாலிவுட் நடிகர் அக்சயகுமார் நடிப்பில் உருவான 'பேட்மேன்' திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. பெண்களுக்கு நாப்கின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்

ரெஜினாவை வாழ்த்தி வழியனுப்பி வைத்த கார்த்திக் படக்குழுவினர்

கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் திரைப்படமான Mr.சந்திரமெளலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்தது என்பது தெரிந்ததே

தமிழகத்தை ஒளிமயமாக்க அமெரிக்க தமிழ் விஞ்ஞானியுடன் கமல் ஆலோசனை

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தின் அடிப்படை தேவைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? என்பதை ஆராயத்தொடங்கிவிட்டார்

கோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்

கோலிவுட் திரையுலகில் அரசியல் உள்பட அனைத்து துறைகளிலும் வாரிசுகள் களமிறக்கப்படுவது சர்வ சாதாரண நிகழ்வாகும்.

சிவ பெருமானின் கடும் கோபத்தால் தீ விபத்து: மதுரை ஆதீனம்

நேற்று நள்ளிரவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இங்குள்ள சுமார் 50 கடைகளில் 35 கடைகள் தீயினால் சேதமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.