நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்த சூப்பர்ஹிட் திரைப்படம்: இயக்குனருக்கு பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படத்தை பார்த்து இயக்குனருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படம் ’காந்தாரா’ மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது என்பது தெரிந்ததே
இந்தப் படம் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலர் பார்த்து இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கில் இந்த படத்தை பார்த்தார்.
படம் பார்த்து முடித்ததும் அவர் இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நமது செழுமையான பாரம்பரியங்களை படம் பிடித்துக் காட்டுகிறது என்றும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
With a team of volunteers and well-wishers watched #KantaraMovie in Bengaluru.
— Nirmala Sitharaman (@nsitharaman) November 2, 2022
Well made @shetty_rishab (writer/director/actor).??
The film captures the rich traditions of Tuluvanadu and Karavali.
@rajeshpadmar @SamirKagalkar @surnell @MODIfiedVikas @KiranKS @Shruthi_Thumbri pic.twitter.com/vVbbk5fNno
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com