'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பு சந்தித்த சோதனைகளை விட ரிலீசுக்கு பின்னர் சந்தித்த சோதனைகளும் அதனால் ஏற்பட்ட சாதனைகளும் அதிகமாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம், மக்களின் மனங்களை பிரதிபலித்து கூறியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வசனத்தை ஒரு மாஸ் நடிகர் கூறியதால் அது தேசிய பிரச்சனையாகவும் உருவெடுத்தது.
பொதுவாக பெரிய நடிகர்கள் அரசை எதிர்த்து கருத்து சொல்ல தயங்குவார்கள். ஆனால் 'மெர்சல்' விஷயத்தில் பெரிய நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரையும், நடிகைகளும் , இயக்குனர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஆதரவாக கருத்து கூறியது படக்குழுவினர்களுக்கு ஊக்கத்தை தந்தது. எனவே சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் இல்லை என்று அறிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது டுவிட்டரில் 'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியை முதல் ஆளாக பாராட்டிய நபராக ரஜினி இருந்தபோதிலும், 'முக்கிய பிரச்சனைகளை விவாதித்த 'மெர்சல்' பட குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் ரசிகர்கள் 'மெர்சல்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினியும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments