கல்லூரி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. சில முக்கிய தகவல்கள்!!!

  • IndiaGlitz, [Friday,September 11 2020]

 

கொரோனா தாக்கத்தால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியின் இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. தற்போது இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் இறுதிக்குள் நடத்தி முடித்துவிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி அனைத்துப் பல்கலைக் கழகங்களும் இறுதியாண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணைகளை வெளியிட்டு இருக்கிறது.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் இறுதியாண்டு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. மாணவர்கள் தங்கள் செல்போன் எண், இ-மெயில் முகவரியை பல்கலைக்கழக இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

இதைத்தவிர பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் செய்யப்பட்ட மாற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி தொற்று அறிகுறி கொண்ட மாணவர்களைத் தனிமைப்படுத்தித் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை அறிகுறி உடைய மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்தால் அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என விதிமுறைகளில் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் தொற்று உடைய மாணவர்கள் எப்போது உடல் ரீதியாகத் தகுதி பெற்றவராக அறிவிக்கப் படுகிறாரோ அப்போது தேர்வை எழுதக் கல்வி நிறுவனம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், எனினும் அத்தகைய மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை ஏற்கனவே வரையறுக்கப் பட்டுள்ள திட்டப்படி தேர்வுகளை நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அடுத்து, கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வசிக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வர்களுக்கும் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை. அவர்களுக்கு பின்னர் ஒரு தேதியில் தேர்வை எழுதக் கல்வி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். முகக்கவசம், சானிடைசர்கள், சோப், சோடியம் ஹைப்போக்ளோரைட் கரைசல் ஆகியவற்றைக் கல்வி நிறுவனங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்களும் தேர்வர்களும் தங்களுடைய உடல்நிலை குறித்து சுய அறிவிப்புப் படிவத்தைச் சமர்பிக்க வேண்டும். தவறினால் தேர்வு மையங்களுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதியில்லை.

தொற்று அறிகுறி இல்லாத ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வறைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும். அவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியம். தேர்வறைக்குள் முகக்கவசத்தைக் கழற்றாமல் அனைத்து நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும். தேர்வு மையங்களுக்குள் கூட்டம் ஏற்படுவதை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும். பேனா-தாள் சார்ந்த தேர்வுகளுக்கு கேள்வித்தாள்களையும் விடைத்தாள்களையும் கொடுப்பதற்கு முன்னால் கண்காணிப்பாளர் தன் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல அவற்றை வாங்கும் முன் மாணவர்களும் தங்கள் கைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

வினா விடைத்தாள்களை விநியோகிக்கும் முன்னரும் எண்ணிப் பார்க்கும்போதும் எச்சில் தொட்டு பணியைச் செய்வது கூடாது. விடைத்தாள் சேகரிப்பு, பேக்கிங் என ஒவ்வொரு கட்டத்திலும் கைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். அடுத்து குறைந்தபட்சமாக 72 மணி நேரங்களுக்குப் பிறகே விடைத்தாள்களைப் பிரிக்க வேண்டும். தேர்வின்போது தேர்வர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டால் அவரைத் தனிமைப்படுத்துவதற்கெனத் தனியாக ஓர் அறை அருகிலேயே இருப்பது அவசியம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

More News

எலிகள் மேற்கொண்ட விண்வெளி பயணம்… காரணம் தெரியுமா???

விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்தில் ஆண்டுகணக்கில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு வரும்போது நரம்பும் சதையுமாக மட்டுமே வருகின்றனர்

ஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் சைலண்ட் சுனாமி சன் ரைசர்ஸ்.... பேட்டிங், பவுலிங் மாஸ்டர்ஸ்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் பேட்டிங், பவுலிங் என சமபலம் கொண்ட அணியாகத் திகழ்வது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

தமிழகத்திலும் ரூ.20 க்கு மூலிகை பெட்ரோல் விற்பனை… பரபரப்பு தகவல்!!!

மதுரையைச் சார்ந்த ராமர் பிள்ளை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மூலிகை பொருட்களில் இருந்து பெட்ரோல் கண்டுபிடித்து இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சுதா கொங்கராவின் ஆச்சரியமான அப்டேட்?

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக தளபதி விஜய் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கடந்த 5 மாதங்களாக மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது தலைவிரித்தாடுகிறது.