நடிகர் சங்க தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • IndiaGlitz, [Friday,October 09 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னை மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி முடிவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பாண்டவர் அணியின் சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிகளுக்கு பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, மற்றும் 24 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.

அதேபோல் சரத்குமார் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச் செயலர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர் பதவிகளுக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், மற்றும் 24 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.

மேலும் தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர் தவிர சிவசாமி என்பவரும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதிப் பட்டியலை தேர்தல் அதிகாரி பத்மநாபன் இன்று சென்னையில் வெளியிட்டார்.

More News

விஷால் மீது சரத்குமார் எடுத்த அதிரடி நடவடிக்கை

நடிகர் சங்க தேர்தல் இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணிகளுக்கு ஆதரவு தேடி வருகின்றனர்...

விக்ரமின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' படம் வரும் 21ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.....

விஷாலுக்கு வில்லனாகும் பிரபல விநியோகிஸ்தர்?

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் பிசியாக இருக்கும் விஷால், தேர்தல் முடிந்தவுடன் 'கொம்பன்' பட இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'மருது' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது....

ராகவா லாரன்ஸ் மாணவர்களை கவர்ந்த 'புலி'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களின் அமோக ஆதரவால் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது....

சிம்புவுக்கு வடிவேலு கூறிய அறிவுரை

நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் சிம்பு, விஷாலை நரி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....