பாவப் பட்டவர்களுக்கே அறிவுரை சொல்வதா? இதென்ன நியாயம்? ராகுல் காந்தி காட்டம்!!!

 

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டு உள்ளார். அது தற்போது பொதுவெளியில் கடும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. உபியின் பல்யா தொகுதியின் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து, “அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயல்களை தடுக்க முடியாது. இதுபோன்ற விவகாரங்கள் நடக்காமல் இருக்க பெற்றோர்கள் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும் நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்” எனத் தெரிவித்து உள்ளார்.

இந்தக் கருத்துக் குறித்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல்காந்தி அவர்கள் தனது டிவிட்டர் பதிவில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியதோடு “இது பாஜகவை வழிநடத்துகிற ஆர்.எஸ்.எஸ்., இன் ஆணாதிக்க மனநிலை இது. ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு நல்ல பண்புகள் கற்பிக்க வேண்டுமா?” எனப் பதிவிட்டு உள்ளார்.

பாஜக எம்எல்ஏவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு நமது  நடிகை ஆண்டிரியா அவர்களும் விமர்சனம் வைத்திருக்கிறார். அதில் “ஆண்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்படும் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியாது. ஒரு பெண் தாக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் அவளுடைய தவறு அல்ல; இந்தியாவின் தாய்களே, உங்கள் மகன்களை நெறிப்படுத்துங்கள். அவர்களுக்கு பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்” என்று தெரிவித்து உள்ளார்.

இச்சம்பவம் குறித்து, உண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுவர்களை நோக்கி நீங்கள் ஒழுங்காக இருங்கள் போதும், என்பது எந்த வகையில் நியாயம் எனப் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பெண்களை நெறிப்படுத்துவதை விட்டுவிட்டு உங்கள் வீட்டு ஆண்களை ஒழுங்குப் படுத்துங்கள், அப்போது சமூகம் வெளிச்சம் பெறும்… என்பது போன்ற குரல்கள் தற்போது பொது வெளியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. இது நல்ல முன்னேற்றமாகவும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

50 கிராம் பொங்கல் எப்படி 220 கிராமாக மாறும்??? ரயில்வே துறையின் அறிவிப்பால் பொங்கிப்போன வாடிக்கையாளர்கள்!!!

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் கடும் வைரலாகி இருக்கிறது. திருச்சியில் இருந்து சென்னையை

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு… பரபரப்பு தகவல்!!!

2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் துவங்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

19 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்த 38 வயது எம்.எல்.ஏ: மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி

19 வயது கல்லூரி மாணவி ஒருவரை 38 வயது எம்எல்ஏ ஒருவர் இன்று காலை திருமணம் செய்ததை அடுத்து கல்லூரி மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

வெறும் 50 ரூபாய்க்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன்: ஆச்சரிய தகவல்

எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆயிரக்கணக்கில் செலவாகும் என்ற நிலையில் வெறும் 50 ரூபாய்க்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து தர இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது

தமன்னா விரைவில் குணமாக பிரபல இயக்குனர் வாழ்த்து!

பிரபல நடிகை தமன்னா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்