தமிழ் கலாச்சாரம், பண்பாட்டுக்கு எதிரான படங்கள் தடை செய்யப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
- IndiaGlitz, [Sunday,October 11 2020]
அடல் காமெடி திரைப்படம் என்ற பெயரில் ஆபாச படம் எடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ’தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு எதிரான திரைப்படங்கள் தடை செய்யப்படும்’ என அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இன்று அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள், ‘ஆபாச படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் இதில் மத்திய மாநில அரசுகளும் சென்சார் போர்டும் தலையிட வேண்டும் என்றும் பாரதிராஜாவின் கோரிக்கை குறித்த கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்தார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் சென்சார் போர்டு உள்ளது என்றாலும் ஆபாச காட்சிகளை நீக்குவதற்கு மத்திய அரசுக்கும் சென்சார் போர்டும் தமிழக அரசு வலியுறுத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். மேலும் தமிழக பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கின்ற எந்த காட்சியையும் எந்த படமாக இருந்தாலும் வெளியிடுவதை சென்சார் போர்டு மூலம் தடை விதிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான படங்கள் இனி வெளிவர வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது