பிலிம்பேர் விருது-2016. சிறந்த நடிகர், நடிகை யார்? முழுவிபரங்கள்
- IndiaGlitz, [Sunday,June 19 2016]
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களுக்கான பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழ் படங்களுக்காக விருது வென்றவர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.
சிறந்த நடிகர் : விக்ரம் (ஐ)
சிறந்த நடிகை: நயன்தாரா (நானும் ரௌடி தான்)
சிறந்த படம்: காக்கா முட்டை
சிறந்த இயக்குனர் : மோகன் ராஜா (தனி ஒருவன்)
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரகுமான் (ஐ)
சிறந்த துணை நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
சிறந்த நடிகர் (Critics Jury Award): ஜெயம் ரவி (தனி ஒருவன்)
சிறந்த நடிகை (Critics Jury Award): ஜோதிகா(36 வயதினிலே)
சிறந்த அறிமுக நடிகர்: ஜீ.வி.பிரகாஷ் (டார்லிங்)
சிறந்த பாடலாசிரியர்: மதன் கார்க்கி (பூக்களே சற்று ஓய்வெடுங்கள் - ஐ)
சிறந்த பாடகர்: சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் - ஐ)
சிறந்த பாடகி : ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல - தங்கமகன்)
விருதுபெற்ற அனைவருக்கும் Indiaglitz தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது.