ஸ்ரீதேவி மரணம் அடைந்த அன்று என்ன நடந்தது? போனிகபூரின் நெருங்கிய நண்பரின் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் உள்ள ஓட்டலின் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். அவர் மதுபோதையில் எதிர்பாராமல் குளியல் தொட்டியில் விழுந்ததால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று அவரது உறவினர்கள் கூறி வருகின்றனர். ஸ்ரீதேவியின் மரணம் மர்மமாகவே இன்னும் ஒருசிலரால் காணப்படும் நிலையில் நெருங்கிய நண்பரும் சினிமா வர்த்தக ஆய்வாளருமான கோமல் நஹ்தாவின் போனி கபூர் மனம் திறந்து அன்றைய தினம் நடந்ததை கூறியுள்ளார். இதனை கோமல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள மனைவி ஸ்ரீதேவியுடன் சென்ற போனிகபூர், பின்னர் உபியில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள நாடு திரும்பினார். பின்னர் 24ஆம் தேதி காலையில் கணவருக்கு போன் செய்த ஸ்ரீதேவி அவரை மிஸ் செய்வதாக கூறியுள்ளார். இதனால் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த போனிகபூர் உடனே துபாய் கிளம்பி சென்றுள்ளார்.
திடீரென எதிர்பாராமல் கணவரை பார்த்த ஸ்ரீதேவி இன்ப அதிர்ச்சியில் மூழ்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதேவி, இரவு பார்ட்டியில் கலந்து கொள்ள தயாராகும் வகையில் குளியல் அறைக்கு சென்றுள்ளார்
15 நிமிடங்கள் ஆகியும் ஸ்ரீதேவி வெளியே வராமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த போனிகபூர் கதவை தட்டியுள்ளார். ஆனால் எந்த ரெஸ்பான்ஸும் இல்லாததால் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி பேச்சுமூச்சின்றி இருந்துள்ளார். ஓட்டல் அறையிலேயே அவரது உயிர் பிரிந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீதேவியின் மரணம் போனிகபூரை நிலைகுலைய வைத்துள்ளது. இவ்வாறு கோமல் நஹ்தா தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments