சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்ப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,December 09 2017]

சென்னை சர்வதேச திரைப்பட  விழா கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 15வது சர்வதேச சென்னை திரைப்பட விழா வரும் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, ஸ்வீடன், ஐரோப்பா, கொரியா உள்ளிட்ட நாடுகளின் படங்கள் உள்பட 150 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் நடித்த 2 படங்களும் திரையிடப்படுகின்றன. சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்ய கலாசார மையம், ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படும்.1

இந்த நிலையில் இந்த விழாவில் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள 12 தமிழ்ப்படங்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்த படங்களின் பட்டியல் இதோ:

1. 8 தோட்டாக்கள்
2. அறம்
3. கடுகு
4. குரங்கு பொம்மை
5. மாநகரம்
6. மகளிர் மட்டும்
7. மனுசங்கடா
8. ஒரு கிடாயின் கருணை மனு
9. ஒரு குப்பை கதை
10. தரமணி
11. துப்பறிவாளன்
12. விக்ரம் வேதா

More News

தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் ஆளும் அரசே காரணம் என்று விஷால் தரப்பினர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வரும் நிலையில்

ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் ரத்தா? எஸ்.வி.சேகர் டுவீட்டால் பரபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில்

ஆர்.கே.நகர் தேர்தலை கலகலக்க வைத்த 'மதுரவீரன்' பாடல்

சண்முகப்பாண்டியன் நடித்து வரும் 'மதுரவீரன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற 'என்ன நடக்குது நாட்டுல' என்ற சிங்கிள் பாடல் வெளிவந்தது.

விஷால் மனுவை நிராகரித்த அதிகாரி திடீர் மாற்றம்

ஆர்.கே.நகரில் போட்டியிட மனுதாக்கல் செய்த விஷாலின் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி திடீரென மாற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வங்கி தேர்வுக்கான புத்தகத்தில் த்ரிஷா குறித்த தகவல்

சமிபத்தில் நடிகை த்ரிஷாவுக்கு யூனிசெப் அமைப்பில் குழந்தைகளுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர் பதவி கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.