பிரபல சினிமா பைனான்சியர் மகள் கடத்தல்

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

 

பிரபல சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்ற புகார் எழ போலீசார் அவர் கடத்தப்பட்டிருப்பாரா என்ற கோணத்தில் அவர்கள் வசிக்கும் தி நகர் பகுதியில் உள்ள சி சி டி வி காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். போத்ரா தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் உட்பட பலருக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து திருப்பி கட்ட தாமிதப்பவர்களை துன்புறுத்தியதாக சி பி சி ஐ டி போலீசால் கைது செய்ய பட்டவர். 

இந்நிலையில் கரிஷ்மாவை போத்ராவின் எதிரிகள் யாரவது கடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸ் துப்பறிந்து வருவதாகவும் சொல்ல படுகிறது. இந்த சம்பவம் தி நகர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.