மாஸ்டர், கைதி, பிகில் படங்களில் நடித்த முக்கிய நடிகர் உயிரிழப்பு… திரையுலகினர் அதிர்ச்சி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல டப்பிங் கலைஞரும் நடிகருமான அருண் அலெக்சாண்டர் தீடிர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48. நேற்று வடபழனியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்தபோது இவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் அங்கிருந்தோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தாகவும் கூறப்படுகிறது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இவர் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி உட்பட பல படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்பிற்கு முன்பாக இவர் டப்பிங் கலைஞராகப் பணியாற்றியவர்.
ஹாலிவுட்டில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட அவதார் உட்பட பல தமிழ் படங்களுக்கும் இவர் டப்பிங் கொடுத்து இருக்கிறார். இதுமட்டுமல்லாது இந்தியில் இருந்து வெளியான ஷாயாஜி ஷிண்டே உள்ளிட்ட வட இந்திய நடிகர்கள் சிலருக்கும் இவர் டப்பிங் கொடுத்து இருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த இவர் நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தமிழ் திரையுலகை சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் இவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர். இவரது இறப்பு குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு உள்ள டிவிட்டர் பதிவில், இவ்வளவு விரைவாக எங்களை விட்டு செல்வீர்கள் என்று நினைக்கவில்லை அண்ணா என்று கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Dint expect you’ll leave us this soon na... couldn’t control my tears...you will be irreplaceable and you’ll always live in my heart na... pic.twitter.com/TcvJNTecAr
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments