தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன் தினம் ஒன்று மட்டுமே இருந்த நிலையில் நேற்று இருவர் பலியானதால் அந்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் இன்று கொரோனாவால் உயிரிழந்ததால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் ஒருவர் இன்று அதிகாலை பலியானதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவது தமிழக மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல பாடகி!

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு 4வது பலி

கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் சிகிச்சை செலவு எவ்வளவு? 

கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு முழு சிகிச்சை செலவு இலவசம் என்பது தெரிந்ததே.

கொரோனா சிகிச்சைக்காக திருமணத்தை தள்ளி வைத்த கேரளா பெண் மருத்துவர்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவர்கள் நர்ஸ்கள் தன்னலம் கருதாது நாளொன்றுக்கு 15 மணி நேரத்தில் இருந்து 20 மணி நேரம் வரை பணி செய்து வருகின்றனர்

கொரோனா நேரத்தில் நினைவுகூருவோம்; இன்னும் சரிசெய்யப்படாத போபால் அணுவுலை வெடிப்பின் கோரங்கள்!!!

இந்த நூற்றாண்டில் இந்தியா சந்தித்த பெரும் பேரழிவு போபால் அணுவுலை வெடிப்பு. இதன் விளைவுகளையே இன்னும் இந்தியாவில் சரிச்செய்யப்படாத நிலையில் கொரோனா வந்து தாக்கிக்கொண்டிருக்கிறது.