கொரோனா வார்டில் பெருகிவிட்ட உடலுறவு… காவலுக்கு இராணுவம் வந்த அவலம்!

  • IndiaGlitz, [Wednesday,September 01 2021]

சுற்றுலாவிற்குப் பெயர்போன தாய்லாந்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பலர் தங்களுக்கு பிடித்த மற்ற நோயாளியுடன் உடலுறவு வைத்துவந்த சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தாய்லாந்து நாட்டின் பாங்காங் மாகாணத்தில் உள்ள சமூத் பிரதான் எனும் இடத்தில் 1,000 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளே இல்லாமல் இரவு நேரங்களில் தங்களுக்கு பிடித்த நோயாளிகளுடன் உடலுறவில் ஈடுபடுவது, போதைப்பொருள் பயன்படுத்துவது, சிகெரெட் பயன்படுத்துவது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதைப்பார்த்து பதறிப்போன மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுக்க தற்போது சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. அதில் சிகிச்சை பெற்றுவந்த பெரும்பாலான நோயாளிகள் இரவு நேரங்களில் கட்டுப்பாடுகளே இல்லாமல் நடந்து கொள்வது தெரியவந்துள்ளது. மேலும் போதைப்பொருள், சிகெரெட் போன்ற விஷயங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதனால் சமூத் பிரதான் சிகிச்சை மையத்தில் தற்போது ஆண், பெண் நோயாளிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு உள்ளனர். மேலும் காவலுக்கு இராணுவம் உள்ளிட்ட போலீசாரும் பணியமர்த்தப்பட்டு இருப்பது படு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் ஸ்பாட்: த்ரிஷா பகிர்ந்த புகைப்படம் வைரல்!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

10 வருடங்கள் கழித்து வெளியான 'மங்காத்தா' செயின் ரகசியம்!

தல அஜீத் நடித்த 'மங்காத்தா' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்தனர் என்பதை பார்த்தோம்.

பிறந்த நாளில் யுவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி ஸாஃப்ரூன் நிசா!

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவருடைய மனைவி ஸாஃப்ரூன் நிசா யுவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் பட ரிலீஸ் தேதி இதுவா?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், சூர்யா மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறது