மீண்டெழு தமிழகமே… கொரோனா நேரத்தில் உதவிக்கரம் நீட்டும் வெளிநாட்டு சொந்தங்கள்!
- IndiaGlitz, [Saturday,May 08 2021]
இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பே சீர்குலைந்து இருக்கிறது. இதனால் அரசியல் ரீதியாகவும் மனிநேய அடிப்படையிலும் பல நாடுகள் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. ஆனால் இதுபோன்ற பெருந்தொற்று காலங்களில் வெளிநாடுகளில் இருக்கும் நம் தமிழ்ச் சொந்தங்களும் தமிழக மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருப்பது பெரும் மகிழ்ச்சியையும் ஆதரவையும் தந்து இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 26,465 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை வசதி, ஆக்சிஜன் போன்ற தட்டுப்பாடுகள் தற்போது தமிழகத்திலும் முளைக்க ஆரம்பித்து இருக்கிறது. இதுபோன்ற நிலைமைகளைச் சமாளிக்க தற்போது வடஅமெரிக்காவில் உள்ள தமிழச்சங்கப் பேரவை எனும் அமைப்பு உதவிசெய்ய முன்வந்துள்ளது.
https://tnfusa.org/helpTNbreathe/
தொற்றுக் காலத்தில் இருந்து தமிழகத்தை மீட்கும் பொருட்டு இந்த அமைப்பு “எழுந்துவா தமிழகமே“ எனும் பெயரில் நிதிதிரட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்த நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து 2 மில்லியன் டாலர் இலக்குடன் நன்கொடை திரட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிதி தற்போது பெருந்தொற்றால் தவித்து வரும் தமிழகத்திற்கு ஒரு பெரும் உதவியாக இருக்கும் எனும் அடிப்படையில் திரப்பட்டு தமிழகத்திற்கு அளிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.