ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் பெண் எஸ்.ஐ உயிரிழந்த பரிதாபம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் முன்னதாக ஆக்சிஜன், மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவி வந்தன. ஆனால் தற்போது மாவட்டம்தோறும் சிறப்பு சிகிச்சை முகாம் மற்றும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து தமிழக அரசு பாதுகாப்பான சிகிச்சை அளித்து வருவதாக சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான சென்னை உயர்நீதிமன்றமே ஒரு வழக்கில் ஒப்புக்கொண்டுள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.ஐ ஒருவர் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் உயிரிழந்து இருக்கிறார். இச்சம்பவம் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் பாதுகாப்பு படையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் புவனேஸ்வரி (45). இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா நோய் தீவிரம் அடைந்து இருக்கிறது. இதனால் உறவினர்கள் சொந்த ஊருக்கே அழைத்து வந்துவிடலாம் என முடிவெடுத்து உள்ளனர். மேலும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் புவனேஸ்வரியை மதுரைக்குக் கொண்டு வருவதற்குள் அந்த மருத்துவமனையின் அனைத்துப் படுக்கைகளும் காலியாகி இருக்கிறது.
இதனால் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் பல இடங்களில் அவருடைய உறவினர்கள் அலைந்து இருக்கின்றனர். இறுதியில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் ஒரு பெண் எஸ்.ஐ உயிரிழந்து இருப்பது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
மேலும் இந்தச் சம்பவத்தைப் பார்த்த சிலர் தனியார் மருத்துவமனையை அணுகுவதிலேயே காலத்தைத் தாழ்த்தாதீர்கள் என்றும் அறிவுரை கூறத் தொடங்கி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout