கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாகப் பணியாற்றும் உலக நாடுகளின் பெண் தலைவர்கள்!!!

  • IndiaGlitz, [Thursday,April 30 2020]

 

உலக நாடுகளில் பெண் தலைவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகத் தற்போது செய்திகள் வலம் வருகின்றன. பெண் தலைவர்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராகச் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர்களின் திட்டமிடல் மற்ற நாடுகளைவிட சிறப்பாக இருப்பதாகவும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. உலகில் 7 நாடுகளில் பெண்கள் தலைமைப் பதவி வகித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1.ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின் ஜேக்கோப்ஸ்டோடிர் – ஐஸ்லாந்தில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் குடிமக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜனவரியின் தொடக்கத்திலே இந்நாடு மற்ற நாட்டு பயணிகளுக்கு தடை வித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 20 வரை இந்நாட்டில் 9 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போதைய நிலைமையில் அந்நாட்டில் 1795 பேருக்கு நோய்த்தொற்றும் 10 உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளன.

2.தைவான் – சீனாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடானா தைவான் எல்லைத் தொடர்பு, போக்குவரத்து, வர்த்தகம் என அனைத்து நிலைகளிலும் சீனாவோடு தொடர்பில் இருக்கிறது. எனவே இதன் அதிபர் சை இங்வென் கொரோனாவைக் கட்டுப்படுத்த உடனடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2 கோடியே 40 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட தைவானில் இதுவரை 6 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 429 பேருக்கு நோய்த்தொற்றும் 6 உயிரிழப்பும் நிகழ்ந்திருக்கிறது.

3.நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் – ஈஸ்டருக்கு வீட்டுக்குள்ளே இருக்குமாறு மக்களிடம் நேரடியாகப் பிரச்சாரம் செய்தார். நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்காக பிரதமர் கடுமையான ஊரடங்கை பிறப்பித்தார். ஏப்ரல் 20 ஆம் தேதி வரை அந்நாட்டில் கொரோனா பாதிப்பினால் 12 பேர் உயிரிழந்தனர். கொரோனா நிவாரண நிதியாக அந்நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் 20 சதவீத ஊதியத்தை வழங்கியுள்ளனர். அரசு உழியர்களின் சம்பளம் 6 மாதங்களுக்கு குறைத்தும் வழங்கப்பட இருக்கிறது. கொரோனா பரவலின் தாக்கத்தால் எந்த வகையிலும் நிதி நிலைமையில் இறக்கம் இருக்காது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இவரது செயல்பாடுகள் இருந்தது. 1474 பேருக்கு நோய்த்தொற்றும் 19 உயிரிழப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

4.ஜெர்மனியின் பிரதமர் சான்சலர் ஏங்கலா மெர்க்கல் – கொரோனா பரவலைத் தீவிரப் பிரச்சனையாக அறிவித்தார். ஐரோப்பிய நாடுகளிலேயே ஜெர்மனியில்தான் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 83 மில்லியன் மக்கள் தொகை நாட்டில் பெரும்பாலன எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. மக்கள் கடுயைமாக சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு தெளிவாக இருந்தது. இந்நாட்டில் கொரோனா பரிசோதனையை ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று நேரடியாக செய்வதற்கு வசதியாக டாக்சிகள் உருவாக்கப்பட்டன. கண்ணாடிக்குள் இருந்துக்கொண்டே அதிகளவிலான பரிசோதனையை இந்நாடு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் சான்சலர் “இது கொரோனா வைரஸுக்கு எதிரான போரின் முடிவல்ல, வெறும் தொடக்கம்தான். இதை எதிர்த்து நீண்டகாலம் போராட வேண்டியிருக்கும்” என்று கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் உரையில் பேசியிருக்கிறார். மேலும், நாட்டு மக்களின் ஊரடங்கு குறித்துப் பேசிய அவர், “கட்டுப்பாடுகள் எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். இது ஜனநாயகத்திற்கு ஒரு சவால், இது நமது ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துகிறது“ என்றும் குறிப்பிட்டார். தொடக்கத்தில் அதிகபாதிப்புகளை கொண்ட ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றாக இருந்த ஜெர்மனியில் தற்போது கொரோனா முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை அந்நாட்டில் 160,059 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மேலும் 6314 பேர் உயிரிழந்துள்ளனர்.

5.நார்வே எர்னா சோல்பெர்க் – ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான நார்வே கொரோனா பரவல் நேரத்தில் நாட்டின் முக்கியத் தேவை குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்நாட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைவு என்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டார் எனவும் ஊடகங்கள் தெளிவுபடுத்தின. அந்நாட்டில் முதன் முறையாக கொரோனா நோய்த்தொற்று அறியப்பட்டவுடன் நாடு முழுவதும் முடக்கப்பட்டது. 20 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டன. மக்களிடம் நேரடியாக பேசும் அணுகுமுறையை பிரதமர் கையாண்டார். மேலும் குழந்தைகளை வைத்தே இவர் விழிப்புணர்வுகளை மேற்கொண்டார். மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் படியான நடவடிக்கைகள் இவரிடம் அதிகரித்து காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை அந்நாட்டில் 7660 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. பலி எண்ணிக்கை 206 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

6.டென்மார்க் மெட்டே ஃபிரடெரிக்சன் - தற்போது கொரோனா பரவலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகத் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார் இந்நாட்டின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன். மக்களுடன் நம்பிக்கை ஏற்படுத்தும் படியான நடவடிக்கைகளில் இவர் சிறந்தவராக அறியப்படுகிறார். இதுவரை அந்நாட்டில் 9008 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. பலி எண்ணிக்கை 434 ஆக பதிவாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

7.பின்லாந்தின் பிரதமர் சன்னா மரின் – நாட்டுமக்கள் வெளியே வருவதற்கு கடுமையான தடைவிதிக்கப்பட்டுள்ளது. 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பிரதமர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். கொரோனா நோயாளி ஒருவருடன் தொடர்புடைய ஒருவர் தனது அலுவலகத்தில் பணியாற்றியதால் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் எதுவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் உலகின் மிக இளவயது பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை 4906 பேருக்கு நோய்த்தொற்றும் 199 உயிரிழப்பும் நிகழ்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளாக இருக்கின்றன. எனவே நலத்திட்டங்கள் அதிகப்படுத்தி எளிமையாக ஊரடங்கை கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. மருத்துவக் கட்டமைப்புகளும் தேவையான அளவில் வைத்திருக்கின்றன. பெண் தலைவர்கள் வெளிப்படையான நடவடிக்கைகளையும் மக்களிடம் நேரடியாக பேசும் அணுகுமுறையையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தலைமைப் பண்புகளில் பெண்களை விட ஆண்களே சிறந்தவர்கள் என்ற கருத்துப் பொதுப்படையாக நிலவிவருகிறது. ஆனால் இக்கருத்தை பொய்ப்பிக்கும் வகையில் உலகின் பெண் தலைவர்கள் தற்போது கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். மேலும் மருத்துவ பணியாளர்களாக உலகம் முழுவதும் 70 விழுக்காடு பெண்கள் பணியாற்றுகின்றனர். எனவே கொரோனா விடயத்தில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில ஆண் தலைவர்களும் தங்களது சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிப்பெற்றுள்ளனர். தென்கொரிய பிரதமர் மூன் ஜெ இன் இந்தத் தொற்றை எதிர்க்கொண்ட விதத்தினால் தேர்தலிலும் வெற்றிப்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு மாறாக வங்கதேசத்தில் நிலைமை வேறாக இருக்கிறது. ஷேக் ஹசினா – கொரோனா நோய்த்தொற்று பொருளாதாரம், சூழ்நிலைமைகளைப் பொறுத்தது என்பதை இந்நாட்டை வைத்துத்தான் புரிந்துகொள்ள முடியும். அந்நாட்டில் கொரோனா பாதுகாப்பு உடைகள் கூட இல்லாமல் பல மருத்துவப் பணியாளர்களுக்கும் நோய்த்தொற்று பரவியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா வார்டில் 20 நாட்கள் தொடர்பணி: வீடு திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் தற்போது மருத்துவர்களும் நர்சுகளும் மருத்துவ ஊழியர்களும்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதி:

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் நேற்று மரணம் அடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பாலிவுட் திரை உலகினர் மீளமுடியாத நிலையில் தற்போது பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக

இந்தியாவில் கொரோனா பாதிப்பு:  33 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்திற்கும் மேல் உள்ள நிலையில் நேற்று இந்தியாவில் 31,332 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில்

ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் பிடிபட்ட 10 பாம்புகள்!

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, 'தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அங்கு பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை

கொரோனாவிற்கு சென்னையை சேர்ந்த இளம்பெண் பலி!

தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 104 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், அதில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.