ஓடிடியில் 'நாரப்பா': அதிர்ச்சியில் ரசிகை செய்த விபரீத செயல்!

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான ‘நாரப்பா’ என்ற படம் ஓடிடியில் வெளியாக இருப்பதை அறிந்த ரசிகை ஒருவர் தனது கையை பிளேடால் அறுத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த திரைப்படம் அசுரன். இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ‘நாரப்பா’ என்ற இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக முடியவில்லை. இதனையடுத்து இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘நாரப்பா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். திரையரங்குகளில் தான் இந்த படம் ரிலீசாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வெங்கடேஷின் தீவிரமான ரசிகை ஒருவர் ‘நாரப்பா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக கூடாது என்று கூறி தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

சூர்யா நடத்தும் தடுப்பூசி முகாம்: யாருக்காக தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

பழம்பெரும் அரசியல்வாதியின் 100வது பிறந்த நாள்: இயக்குனர் பாரதிராஜாவின் நெகிழ்ச்சியான அறிக்கை!

பழம்பெரும் அரசியல்வாதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகருமான என்.சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த நாள் வரும் 15ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அவருடன் நெருங்கி பழகியவர்களில்

விராட் கோலி நெஞ்சில் சாய்ந்த வில்லியம்சன்… இறுதிப்போட்டி குறித்து மனம் திறந்த பேட்டி!

சவுதாம்படனில் நடைபெற்ற உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8

ஜாதித்தீவாக மாறும் சென்னை ஐஐடி....! வேலையை ரிசைன் செய்வதாக பேராசிரியர் கடிதம்...!

நாட்டில் மாபெரும் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐ.ஐ.டி கருதப்படுகிறது. இங்கு பணிபுரிய வேண்டும் என்றும், படிக்கவேண்டும் என்பதும் பலரின் கனவாகவே இருந்து வருகிறது.

19 வருட உலகச் சாதனையை முறியடித்த இந்தியச் சிறுவன்… செஸ்ஸில் இன்னொரு புது வரவு!

செஸ் விளையாட்டிற்குப் பெயர்போன விஸ்வநாதன் ஆன்ந்த் இந்தியாவை சேர்ந்தவர் என்ற முறையில் நாம் பெருமைப்பட்டு கொள்கிறோம்.