உசந்துவிட்ட மனிதநேயம்… சாலையோர மக்களின் பசியை ஆற்றும் பெண் ஆட்டோ ஓட்டுநர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நெல்லையில் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்துவருபவர் தேவி. இவர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது தனது ஆட்டோவில் சென்று சாலையோர மக்களின் பசியை ஆற்றி இருக்கிறார். மேலும் கொரோனா நேரத்தில் உணவின்றி தவித்து வந்த பலருக்கும் இவர் 3 வேளையும் இலவசமாக உணவிட்டு அவர்களின் பசிப் பிணியைப் போக்கி இருக்கிறார்.
மேலும் கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப் பணியை தற்போது வரையில் செய்து வருவதாகத் தேவி குறிப்பிட்டு இருக்கிறார். இதற்காக தனக்கு ஆதரவு அளிக்கும் நபர்களிடம் இருந்து நன்கொடை பெற்று இவரே 3 வேளையும் சமைத்து அந்த உணவை ஆட்டோவில் எடுத்துச் சென்று சாலையோர மக்கள், மற்றும் அரசு மருத்துவமனைக்கு முன்பு பசியால் வாடுவோருக்கு வழங்கி வருகிறார்.
இதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட இவர், நான் கணவரை இழந்து தனியாகத் தவித்தபோது பல நல்ல உள்ளங்கள் எனக்கு உதவிக்கரம் நீட்டின. எனக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தச் சமூகத்துக்கு நான் மீண்டும் என நன்றியை தெரிவித்து வருகிறேன். மேலும் எனக்கு நன்கொடை கிடைக்கும் அளவிற்கு நான் உணவுகளைச் சமைத்து அதை இயலாதவர்களுக்கு கொடுத்து வருகிறேன்.
இதைவிடவும் அதிகமான நன்கொடை கிடைக்கும்போது அதிகமான உதவிகளைச் செய்வேன் என உணர்ச்சிப் பொங்க தெரிவித்து இருக்கிறார். இந்தச் சம்பவத்தைத் தொடந்து தேவிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இயலாத நிலையிலும் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் தேவிக்கு தற்போது நன்கொடைகளைக் கொடுக்கவும் சிலர் முன்வந்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments