ரஜினியின் 'காலா' படப்பிடிப்பு இன்று முதல் திடீர் ரத்து

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

ஃபெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் ரஜினியின் 'காலா' உள்ளிட்ட சுமார் 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, 'கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெப்சி வேலைநிறுத்தம் செய்தபோது தயாரிப்பாளர் சங்கத்தினர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி ஃபெப்சிக்கு எதிராக புதிய சங்கம் ஒன்று ஆரம்பிக்கும் முயற்சி ஒன்றுக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

எனவே எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்' என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

ஃபெப்சியின் இந்த முடிவு காரணமாக ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விமலுக்கு திருப்புமுனை ஏற்படுத்துவரா ஓவியா?

நடிகர் விமல் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து கூறினர்...

புளூவேல் அட்மின் கைது! முடங்குமா ஆபத்தான விளையாட்டு?

உலகையே ஆட்டிப்படைத்து வந்த ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டின் அட்மின் ரஷ்ய போலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

முதல்வரை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிரடி அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

ஓட்டுனர் உரிமம் காணாமல் போய்விட்டால் விண்ணப்பிக்க எளிய வழி

நாளை முதல் ஓட்டுனர் உரிமம் ஒரிஜினலை கையில் வைத்து கொண்டுதான் வாகனங்களை ஓட்ட முடியும்.

அஜித்தின் விவேகம்: தமிழகம், இந்தியா, உலக வசூல் விபரம்

தல அஜித் நடித்த 'விவேகம்' ரிலீஸ் ஆகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் தற்போது ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.