“சிட் டவுன் இந்தியா, ஷட் டவுன் இந்தியா, ஷட் அப் இந்தியா” என மத்திய அரசின் திட்டத்திற்கு பெயர் வைக்கலாம் – சசி தரூர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியின் உரை குறித்த விவதாதத்திற்கு நன்றி தெரிவித்து நேற்று காங்கிரஸ் கட்சி, திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பி. ஆன சசி தரூர் உரையாற்றினார். அப்போது பா.ஜ.க. இந்தியாவில் பிரிவினையைத் தூண்டுகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் தோல்வியைத் தழுவியுள்ளது. எனவே இனிமேல் மத்திய அரசின் திட்டங்களுக்கு “சிட் டவுன் இந்தியா, ஷட் டவுன் இந்தியா, ஷட் அப் இந்தியா” என்று மாற்றி பெயர் வைக்கலாம் என்று பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டில் பிரிவினையைத் தூண்டுகிறது என்றும் நாட்டில் “இந்து vs முஸ்லீம்”, “Us vs They” மற்றும் “Ramzade vs I Won’t say” என்று பிரிப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். 2020 இல் இந்தியாவின் ஆத்மாவை பிரிப்பதற்கு மத்திய அரசாங்கம் மட்டுமே முழு பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
பா.ஜ.க. வினர் 'tukde tukde gang', என்று இடதுசாரி செயல் பாட்டாளர்களை கிண்டல் செய்வதைக் குறித்தும் கேள்வி எழுப்பினார். “(stand up) ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நடிகர்களை தடை செய்வதில் நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள்” (stand up) ஸ்டாண்ட் அப் இந்தியாவை குறித்து எந்த திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டு காட்டினார். முன்னதாக நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் வெளி நாட்டுப் பயணத்திற்கு தடை விதிக்கப் பட்டதைக் குறிப்பிட்டுக் காட்டியே இப்படி பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
மேலும், அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் கடும் தோல்வியை சந்தித்து உள்ளன, அதனை மறைப்பதற்கு முயற்சிகள் செய்யப் படுகின்றன என்றும் குறிப்பிட்டார். நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீரில் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தல், அங்கு இணைய வசதிகளை துண்டித்தல் போன்ற செயல்களில் தவறான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை 12% ஆக உயர்த்தாமல், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியாது எனவும் வெறும் கனவாகவே இது இருக்கிறது எனவும் பேசி முடித்தார்.
உரையின் தொடக்கத்தில், அரசாங்கத்தின் கொள்கைகள், சாதனைகள் மற்றும் நாடு முன்னோக்கி செல்ல வேண்டிய பாதை ஆகியவற்றை சசி தரூர் எடுத்துக் காட்டினார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments