“சிட் டவுன் இந்தியா, ஷட் டவுன் இந்தியா, ஷட் அப் இந்தியா” என மத்திய அரசின் திட்டத்திற்கு பெயர் வைக்கலாம் – சசி தரூர்

 

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியின் உரை குறித்த விவதாதத்திற்கு நன்றி தெரிவித்து நேற்று காங்கிரஸ் கட்சி, திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பி. ஆன சசி தரூர் உரையாற்றினார். அப்போது பா.ஜ.க. இந்தியாவில் பிரிவினையைத் தூண்டுகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் தோல்வியைத் தழுவியுள்ளது. எனவே இனிமேல் மத்திய அரசின் திட்டங்களுக்கு “சிட் டவுன் இந்தியா, ஷட் டவுன் இந்தியா, ஷட் அப் இந்தியா” என்று மாற்றி பெயர் வைக்கலாம் என்று பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டில் பிரிவினையைத் தூண்டுகிறது என்றும் நாட்டில் “இந்து vs முஸ்லீம்”, “Us vs They” மற்றும் “Ramzade vs I Won’t say” என்று பிரிப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். 2020 இல் இந்தியாவின் ஆத்மாவை பிரிப்பதற்கு மத்திய அரசாங்கம் மட்டுமே முழு பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

பா.ஜ.க. வினர் 'tukde tukde gang', என்று இடதுசாரி செயல் பாட்டாளர்களை கிண்டல் செய்வதைக் குறித்தும் கேள்வி எழுப்பினார்.  “(stand up) ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நடிகர்களை தடை செய்வதில் நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள்” (stand up) ஸ்டாண்ட் அப் இந்தியாவை குறித்து எந்த திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டு காட்டினார். முன்னதாக நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் வெளி நாட்டுப் பயணத்திற்கு தடை விதிக்கப் பட்டதைக் குறிப்பிட்டுக் காட்டியே இப்படி பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேலும், அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் கடும் தோல்வியை சந்தித்து உள்ளன, அதனை மறைப்பதற்கு முயற்சிகள் செய்யப் படுகின்றன என்றும் குறிப்பிட்டார். நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீரில் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தல், அங்கு இணைய வசதிகளை துண்டித்தல் போன்ற செயல்களில் தவறான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை 12% ஆக உயர்த்தாமல், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியாது எனவும் வெறும் கனவாகவே இது இருக்கிறது எனவும் பேசி முடித்தார்.

உரையின் தொடக்கத்தில், அரசாங்கத்தின் கொள்கைகள், சாதனைகள் மற்றும் நாடு முன்னோக்கி செல்ல வேண்டிய பாதை ஆகியவற்றை சசி தரூர் எடுத்துக் காட்டினார் என்பதும் குறிப்பிடத் தக்கது.  

More News

'நாடோடிகள்' பட நடிகர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' திரைப்படம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் கேகேபி கோபாலகிருஷ்ணன் இன்று காலை காலமானார்.

இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக போரடுவேன்: ரஜினிகாந்த் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிஏஏ, என்.ஆர்.சி போன்ற சட்டங்கள் குறித்து இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என அவரை விமர்சனம் செய்பவர்கள்

'வலிமை' படத்தின் வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்!

தல அஜித் நடிப்பில் ஹெ.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை குடமுழுக்கை தடுக்க சென்ற பிரபல இயக்குனர் கைது!

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழில் மட்டுமே மந்திரம் சொல்ல வேண்டும்

வெப்சீரீஸில் லட்சுமிராய்: டாப்லெஸ் புகைப்படத்தால் பரபரப்பு

திரைப்படத்திற்கு இணையாக தற்போது வெப்சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த வெப்சீரிஸ்களில் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது