ரஷ்ய அதிபர் புதினுக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்

ஏழை முதல் பணக்காரர் வரை பாமரர் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை பாகுபாடின்றி பரவி வரும் கொரோனா வைரஸ், ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் உள்பட பல விவிஐபிக்களை தாக்கியுள்ள நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புதின் அவர்களையும் தாக்கியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா மீட்பு பணி குறித்த ஆய்வை மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த டாக்டர் ஒருவரிடம் ஆலோசனை செய்துவிட்டு பின்னர் அவரிடம் இருந்து விடைபெறும்போது அவருக்கு கைகுலுக்கினார்.

இந்த நிலையில் அதிபர் புதின் கைகுலுக்கிய டாக்டருக்கு தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிபர் புதின் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டுபிடிக்க ரத்த பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் கைகுலுக்குவதை தவிர்த்து இந்திய பாரம்பரிய முறைப்படி அனைத்து தலைவர்களும் கையால் கும்பிட்டு வணங்கி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புதின் கைகுலுக்கியதால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.