56 வயதிலும் கடுமையான உடற்பயிற்சியை செய்யும் தமிழ் நடிகை

56 வயது தமிழ் நடிகை ஒருவரின் கடுமையான உடற்பயிற்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபு, கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய ’கல்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் பல தமிழ் திரைப்படங்களில் அம்மா அக்கா உள்ளிட்ட வேடங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் 3 ‘பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட பாத்திமா பாபு, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க தவறியதால் முதல் நபராக போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பாத்திமா பாபுவின் உடற்பயிற்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இளவயதினர் கூட செய்ய முடியாத கடுமையான உடற்பயிற்சியை 56 வயதில் பாத்திமா செய்த உடற்பயிற்சி வீடியோவை நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.