பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இன்னொரு பிரபலம்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் நடிகை மதுமிதா மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா ஆகியோர் உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்

அதேபோல் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்த நடிகை அபிராமி வெங்கடாச்சலம், வனிதா விஜயகுமார் ஆகியோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மேலும் ஒரு பிரபலம் கலந்து கொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. அவர்தான் குணசித்திர நடிகையும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு. இன்னும் இந்த நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள் யார் யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

ஜோதிகாவின் 'ராட்சசி' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்!

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு அரசு பள்ளியின் அவலத்தையும் அந்த அரசுப்பள்ளியை ஒரு பொறுப்புள்ள ஆசிரியை நினைத்தால்

'பிகில்' ஃபர்ஸ்ட்லுக்கில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

விஜய் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் 'பிகில்' என சற்றுமுன் வெளியாகிய நிலையில் இந்த படத்தின் டைட்டில் சமூக வலைத்தளங்களில் தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றது.

இதுதான் 'தளபதி 63' படத்தின் அட்டகாசமான டைட்டில்!

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படத்தை 'தளபதி 63' என்று கூறுவதை இந்த நிமிடத்தில் இருந்து நிறுத்தி கொள்ளலாம். ஆம், ஏற்கனவே அறிவித்தபடி 'தளபதி 63' படத்தின் அட்டகாசமான டைட்டில் சற்றுமுன் வெளியாகியுள்ளது

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மரணம்!

கடந்த வெள்ளிக்கிழமையன்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்

சந்தானம் நடித்த 'A1' ரிலீஸ் குறித்த தகவல்

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வசூலை பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவான அடுத்த படமான ''A1''