சபரிமலைக்கு சென்ற பாத்திமா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து நீக்கம்

  • IndiaGlitz, [Sunday,October 21 2018]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர் கவிதாவுடன் முஸ்லீம் பெண்ணான பாத்திமா என்பவர் சபரிமலைக்கு சென்றார். ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய இருவரும் பின்னர் கேரள அரசின் உத்தரவால் திருப்பி அனுப்பப்பட்டனர்

இந்த நிலையில் பாத்திமா முஸ்லீம் பெண் என்றும், பரபரப்பை ஏற்படுத்தவே அவர் ஐயப்பன் கோவிலுக்கு வந்ததாகவும், பக்தியின் காரணமாக வரவில்லை என்றும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாத்திமாவை முஸ்லீம் சமூகத்தில் இருந்து நீக்கி கேரளா முஸ்லீம் ஜமாஅத் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாத்திமாவை மட்டுமின்றி அவரது குடும்ப உறுப்பினர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இந்து மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தி குழப்பம் விளைவிக்க முயன்றதால் பாத்திமா நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.