ஊருக்கு சென்ற மனைவி! மகளை கர்ப்பாமாக்கிய கொடூர தந்தை

  • IndiaGlitz, [Sunday,November 11 2018]

மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில் பெற்ற மகளை பாலியல் வன்முறை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு மனைவியும் 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மனைவி ஊருக்கு சென்ற நேரத்தில் தனது காம இச்சையை தீர்த்து கொள்ள சொந்த மகளையே மிரட்டி பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார் பாலமுருகன். இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இந்தா நிலையில் கடந்த சில நாட்களாகவே மகளிடம் தெரிந்த மாற்றத்தை கண்டுபிடித்த பாலமுருகனின் மனைவி, மகளிடம் நடந்தது என்ன? என்று கேட்க, தந்தை தன்னை சீரழித்ததை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகனின் மனைவி தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார். பரிசோதனையில் மகள் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அவர், தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த் புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகளை பாதுகாப்புடன் கவனித்து கொள்ள வேண்டியா தந்தையே சீரழித்தது அந்த பகுதியினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.