டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் வைத்த போலீஸ் தந்தை… நெகிழ்ச்சி ஏற்படுத்தும் வைரல் புகைப்படம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர மாநிலத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் டிஎஸ்பியாக இருக்கும் தனது சொந்த மகளுக்கு பெருமிதத்தோடு சல்யூட் வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தப் புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி சந்திரகிரி போலீஸ் பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் இருப்பவர் ஒய்.ஷியாம் சுந்தர். இவரின் மகள் ஜெஸி பிரசாந்தி குண்டூர் மாவட்டத்தின் காவல் உதவி கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சந்திரகிரி போலீஸ் பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஜெஸி பிரசாந்தி வருகை தந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஷியாம் சுந்தர் தனது மகளின் வருகையை பார்த்தும் பெருமிதத்தோடு சல்யூட் வைக்கிறார். அந்த சல்யூட்டை மகளான டிஎஸ்பி புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறார்.
இப்படி தந்தையும் மகளும் நெகிழ்ச்சி பொங்க மரியாதையை பரிமாறிக் கொள்வதைப் பார்த்து, அருகில் இருந்த காவலர்கள் மகிழ்ந்து உள்ளனர். மேலும் அப்போது எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது. மேலும் அந்த தந்தையின் சல்யூட்டில் ஒரு பெருமிதமும் மகிழ்ச்சியும் இருப்பதாகப் பலரும் கமெண்ட் செய்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#APPolice1stDutyMeet brings a family together!
— Andhra Pradesh Police (@APPOLICE100) January 3, 2021
Circle Inspector Shyam Sundar salutes his own daughter Jessi Prasanti who is a Deputy Superintendent of Police with pride and respect at #IGNITE which is being conducted at #Tirupati.
A rare & heartwarming sight indeed!#DutyMeet pic.twitter.com/5r7EUfnbzB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments