பிறந்த குழந்தைக்கு X Æ A-12 எனப் பெயர் சூட்டிய தந்தை!!! எப்படி உச்சரிப்பது விழிப்பிதுங்கும் நெட்டிசன்கள்???
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல SpaceX நிறுவனத்தின் நிர்வாகியான எலோன் மஸ்க் தனக்கும், தனது தோழியும் பிரபல பாடகியுமான கிரையம்ஸ் க்கும் மே 5 ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு ஒரு விசித்திரமான குறியீட்டு பெயரை வைத்திருக்கிறார். குழந்தையின் புகைப்படங்களையும் பெயரையும் தனது டிவிட்டர் பக்கத்தில் எலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த குறியீட்டுப் பெயர் தான் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
மிகவும் வேடிக்கையாக பேசக்கூடிய எலோன் மஸ்க் முதலில் கிண்டலுக்காக இந்தப் பதிவை போட்டிருப்பதாக நினைத்த நெட்டிசன்கள் உண்மையில் இது குழந்தையின் பெயர் என அறிந்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். எப்படி உச்சரிப்பது என்றும் அவரிடன் சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். நெட்டிசன்களின் சந்தேகத்தை கிரையம்ஸ் தற்போது விளக்கியிருக்கிறார்.
X - பொதுவாக அறியப்படாத பொருளை குறிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு குறியீடு. இந்தக் குறியீடு அவருடைய நிறுவனத்தின் பெயரிலும் இருக்கிறது. Æ – என்பது A மற்றும் E யின் கலவை. இது ‘ash’ எனவும் கூறப்படுகிறது. லத்தீன் மொழியில் இந்த வார்த்தையைப் பயன்படுத்து கின்றனர். டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து நாடுகளில் இந்த எழுத்து பயன்பாட்டிலும் இருக்கிறது. A-12 - அமெரிக்காவின் முக்கியத் துறையான CIA க்கு வடிவமைக்கப்பட்ட விமானத்தின் பெயர் A-12 . இவையனைத்தையும் இணைத்து X Æ A-12 Musk என்று குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை எப்படி உச்சரிப்பது என்று கிரைம்ஸ் தெளிவாக குறிப்பிட வில்லை. எனவே இந்த பெயரை எப்படி உச்சரிப்பார்கள் என்று சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் விவாதத்தை நடத்தி வருகின்றனர்.
SpaceX நிறுவனம் விண்வெளித்துறையில் நாசாவுக்கு இணையாக சாதனைகளை குவித்து வரும் ஒரு தனியார் நிறுவனம் ஆகும். பிரபல கோடிஸ்வரரான எலான் மஸ்க் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் செயலாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இந்நிறுவனம் அனுப்பிய பேட்டரி டெஸ்லா கார் சூரியனை முழுமையாக சுற்றிவந்து சாதனை படைத்தது. மேலும் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பி வெற்றிகரமான ஆய்வை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
•X, the unknown variable ⚔️
— ꧁ ༒ Gℜiꪔ⃕es ༒꧂ ?????? 小仙女 (@Grimezsz) May 6, 2020
•Æ, my elven spelling of Ai (love &/or Artificial intelligence)
•A-12 = precursor to SR-17 (our favorite aircraft). No weapons, no defenses, just speed. Great in battle, but non-violent ??
+
(A=Archangel, my favorite song)
(⚔️?? metal rat)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com