மகன் இல்லாத நேரத்தில் மருமகளிடம் சில்மிஷம் செய்த மாமனார்: மருமகள் எடுத்த அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
மகன் இல்லாத நேரத்தில் மருமகளிடம் பாலியல் தொந்தரவு செய்த மாமனார் ஒருவர் மீது மருமகள் காவல் துறையில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. மிகப்பெரிய கனவுகளுடன் புகுந்த வீட்டிற்கு அந்த பெண் வாழ்வதற்காக சென்றார். புதுமண தம்பதியர் இருவரும் சில நாட்கள் சந்தோஷமாக இருந்தனர்.
அப்போது ஒரு நாள் வீட்டில் கணவர் இல்லாத நிலையில் திடீரென மாமனார் மருமகளிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருமகள் இவ்வாறு செய்தால் கணவரிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால் மாமனார் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கணவர் வீட்டுக்கு வந்ததும் அவரிடம் மனைவி நடந்ததைக் கூறினார். ஆனால் கணவர் அதனை நம்பவில்லை. தன்னுடைய தந்தை நல்லவர் என்றும் அப்படிப்பட்டவர் இல்லை என்றும், தனது மனைவி தான் வீண் பழி சொல்வதாகவும் கூறி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மாமனாரின் பாலியல் தொல்லை, அதை கணவன் நம்ப மறுப்பது ஆகியவற்றால் வெறுத்துப்போன மருமகள், வீட்டை விட்டு வெளியேறி, பெற்றோர்கள் உதவியுடன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் மாமனார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout