மருமகள் மீது பேராசை.....! மாமனார் கொலையான கொடூரம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரை, மருமகள் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், கேளல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் முருகேசன். இவருடைய மகன் வினோபாராஜன் என்பவருக்கும், கனிமொழி என்ற பெண்ணும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், குழந்தை பேறு இல்லாமல் இருந்துள்ளனர் இந்த தம்பதி. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இச்சை எண்ணமுடைய மாமனார், மகன் வீட்டில் இல்லாத சமயத்தில் கனிமொழிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இதை தாங்க முடியாமல் இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் இதை கொள்ளாத ராஜன், என் அப்பா அப்படி எல்லாம் செய்யமாட்டார் என்று கூறி தட்டிக்கழித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் மாமனாருக்கு பாடம் கற்பிக்க திட்டமிட்ட கனிமொழி கடந்த ஜூலை 31-ஆம் தேதியன்று, தான் சமைத்த குழம்பு உணவில் குருணை மருந்து மற்றும் எலிபேஸ்ட் ஆகியவற்றை கலந்து வைத்துள்ளார். எப்பவும் போலவே முருகேசன் மருமகளை சாப்பாடு பரிமாறு என்று கூறியுள்ளார். கனிமொழியும் பரிமாற, அதை உண்ட முருகேசனுக்கு 2 நாட்களாக வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க, சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். விஷம் வைத்த விஷயம் யாருக்கும் தெரியாததால், அவருடைய உடலுக்கு இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்துவிட்டனர்.
குழந்தை இல்லாமல் மன அழுத்தத்தில் இருந்த கனிமொழி, தான் செய்த கொலை குற்றத்தை நினைத்து குற்ற உணர்வோடு இருந்துள்ளார். இதனால் கடந்த வியாழன் அன்று கீழத்தூவல் காவல் நிலையத்தில் சரணடைந்து, தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments