மகனின் மரண செய்தி கேட்டு மயங்கி விழுந்த சுஷாந்த் சிங் தந்தை: கவலைக்கிடம் என தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் அவர்கள் நேற்று மதியம் சுமார் இரண்டு மணி அளவில் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி கிரிக்கெட் துறையில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். சுஷாந்த்சிங் மரணத்தை இன்னும் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று விராட் கோலி உள்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று சுஷாந்த்சிங் மரணம் குறித்த செய்தி அறிந்ததும் போலீசார் முதல் கட்டமாக பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மகனின் மரணம் குறித்த செய்தி கேட்டதும் அவருடைய குடும்பத்தினர் ஆடிப்போய்விட்டார்கள். குறிப்பாக ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட ஒரு சில நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் சுஷாந்த்சிங் தந்தை கிருஷ்ணகுமார், மகனின் மரணச் செய்தி கேட்டு மயங்கி விழுந்ததாகவும் இதனை அடுத்து அவர் தற்போது பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

சுஷாந்த்சிங் தந்தை உடல் நலம் குறித்து கருத்து கூறிய மருத்துவர்கள் அவர் தனது மகனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் பேச முடியாமல் இருப்பதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது

இந்த நிலையில் ஊரடங்கிற்கு முன் சுஷாந்த்சிங் தனது சொந்த ஊரான பாட்னாவுக்கு வந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அப்போது அவருக்கு எந்தவிதமான மன அழுத்தமும் இல்லாமல் இருந்தது என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு நேரத்தில் தான் திடீரென அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் குடும்பத்தினர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

தமிழகத்தில் 38 பேர் கொரோனாவால் உயிரிழப்பு: அதிகமாகி வரும் உயிரிழப்புகளால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 1000க்கும் மேல் இருந்தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது உயிரிழப்புகள் குறைவாக இருந்தது

சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை குறித்து பீலா ராஜேஷ் கூறியது என்ன?

34 வயதே ஆன பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை. இந்த இளம் வயதிலேயே மன அழுத்தத்திற்கு ஆளாகி அது தற்கொலை வரை சென்றது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது.

கொரோனாவில் இருந்து குணமாகி மீண்டும் பணியில் சேர்ந்த சென்னை செவிலியர் கொரொனாவால் மரணம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் வாழ்பவர்கள்

முதலிரவுக்கு சில நிமிடங்களுக்கு முன் மயங்கி விழுந்த மணமகன்: கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடந்து முதலிரவு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் அவருக்கு கொரோனா உறுதி

மணிரத்னம் பட நடிகையின் அபார்ட்மெண்டுக்கு கொரோனாவால் சீல்? பரபரப்பு தகவல்

பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா என்று கூறியதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'உயிரே' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தக்க தய்ய தய்யா' என்ற பாடல்தான்