திருமணத்தில் பாட்டு பாடிய தந்தை திடீர் மரணம்: மகளிடம் உண்மையை மறைத்த உறவினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
மகளின் திருமணத்தில் பாட்டு பாடிய தந்தை திடீரென மரணம் அடைந்த நிலையில் அவர் இறந்ததை மணமகளுக்கு தெரிவிக்காமல் உறவினர்கள் மறைத்து, திருமணத்தை முடித்து வைத்த சோக நிகழ்ச்சி ஒன்று கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்பவரது மகள் அர்ச்சாவின் திருமண வரவேற்பு கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடந்த பாட்டு கச்சேரியில் மணமகளின் தந்தை உற்சாகமாக பாட்டு பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனையடுத்து உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஞாயிறு காலை மரணம் அடைந்துவிட்டார்.
விஷ்ணு பிரசாத் மரணம் அடைந்ததை அவருடைய உறவினர்கள் அவரது மகளிடம் சொல்லாமல் மறைத்துவிட்டனர். மறுநாள் ஞாயிறு அன்று திருமணத்தின்போது அர்ச்சா தனது தந்தை எங்கே என்று கேட்டபோது உறவினர்கள் ஏதேதோ சொல்லி சமாளித்து ஒருவழியாக திருமணத்தை நடத்தி முடித்தனர். திருமணம் முடிந்து மணமகன் வீட்டில் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர், தந்தை இறந்தது குறித்து உறவினர்கள் மகளிடம் பக்குவமாக கூறியுள்ளனர். தனது தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுத அர்ச்சாவை தேற்றுவது எப்படி என்று தெரியாமல் உறவினர்கள் திணறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த விஷ்ணுபிரசாத் ஒரு போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout