கலப்பு திருமணம் செய்த மகளை ஈவு இரக்கம் இன்றி எரித்த கொடூர தந்தை! பதற வைக்கும் சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெற்றோரின் விருப்பத்தை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்ட மகளை, அவருடைய தந்தை பூட்டிய வீட்டில் வைத்து ஈவு இரக்கம் இன்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம், மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம், அகமத்நகரைச் சேர்ந்த முகேஷ் ரான்சிங் (23) என்பவர், ராமா பார்த்தி என்பவரின் மகள் ருக்மணி (19) என்பவரை காதலித்துள்ளார். இவர் முறைப்படி வீட்டிற்கு சென்று பெண் கேட்டும், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் இவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பெற்றோரை மீறி முகேஷ் மற்றும் ருக்மணி இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் ருக்மணிக்கும் - முகேஷுக்கும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ருக்மணி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் மனைவியை, சமாதானப்படுத்துவதற்கு சென்ற முகேஷ் அவரை சமாதானப்படுத்திய பின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார். அப்போது இவர்கள் மேல் உள்ள ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள ருக்மணியின் தந்தை ராமா பார்தி மற்றும் அவருடைய உறவினர்கள், சுரேந்திரா, கான்சாம் சரோஜ், ஆகியோர்... இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டை பூட்டி தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இவருடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அனைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த ருக்மணி மற்றும் முகேஷ் இருவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 70 சதவீத தீக்காயங்களுடன் ருக்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 50 சதவீத தீக்காயத்துடன் முகேஷ் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com