வீல்சேரில் இருந்த மகனுக்காக… நடக்க உதவும் ரோபோவை உருவாக்கிய பாசக்கார தந்தை!
Send us your feedback to audioarticles@vaarta.com
விபத்து மற்றும் போலியோ பாதிப்பினால் உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் கால்களை இழந்து, வாழ்நாள் முழுவதும் வீல் சேரில் அமர்ந்து இருப்பதைப் பார்த்து இருப்போம். ஆனால் பிறவியிலேயே மரபணு குறைபாட்டால் வாழ்நாள் முழுவதும் வீல்சேரில் உட்கார வேண்டிய தனது மகனைப் பார்த்து ஒரு தந்தை கடும் துயரம் கொண்டார்.
மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆஸ்கார் கான்ஸ்டான்சா (16) எனும் அந்தச் சிறுவன் தனது தந்தையை பார்த்து, நீங்கள் ஒரு ரோபோட்டிக்ஸ் பொறியாளர் தானே? ஏன் எனக்காக நடக்க உதவும் ஒரு ரோபோவை உருவாக்கக்கூடாது என கேட்டிருக்கிறார். இதனால் உற்சாகம் கொண்ட ஜீன் லூயிஸ் என்பவர் தற்போது தனது சொந்த மகனுக்காக நடக்க உதவும் ரோபோட்டிக்ஸ் இயந்திரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த இயந்திரத்தைக் கொண்டு தற்போது கான்ஸ்டான்சா எழுந்து நடக்கிறார்.
இதனால் தன்னைப்போல வீல் சேரில் முடங்கிக் கிடக்கும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த இயந்திரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று அந்தச் சிறுவன் ஆனந்தக் கண்ணீர் வடித்து இருக்கிறார். பிரபல ரோபோட்டிக் நிறுவனமான வாண்டர் கிராப்ட் எனும் நிறுவனத்தின் துணை இயக்குநராக இருப்பவர்தான் இந்த ஜீன் லூயிஸ். தனது சொந்த மகனின் நடைக்காக தற்போது புது ரோபோ இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார்.
நடக்க உதவும் இந்த ரோபா இயந்திரமானது தலை முதல் கால் வரை தன்னுடன் இணைத்துக் கொண்டு மனிதர்களை முதுகு நிமிர்த்தி நடக்க உதவுகிறது. இந்த கண்டுபிடிப்பு இனி வீல் சேரில் அமர்ந்து இருக்கும் பலரது வாழ்க்கையை மாற்றும் என்றும் ஜீன் லூயிஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பொறியியல் மற்றும் மருத்துவத் துறையில் புது புரட்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த இயந்திரம் 176,000 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout