பிரபல இயக்குனரின் படத்தில் முதல்முறையாக கார்த்திக்-கவுதம் கார்த்திக்

  • IndiaGlitz, [Sunday,October 01 2017]

தமிழ் சினிமாவில் தந்தை-மகன் இணைந்து நடிப்பது புதிதல்ல. சிவாஜி-பிரபு, சிவகுமார்-சூர்யா, சத்யராஜ்-சிபிராஜ், விஜயகாந்த்-சண்முகப்பாண்டியன் என உண்மையான தந்தை-மகன் நடித்த படங்கள் பல உள்ளது. அந்த வரிசையில் தற்போது கார்த்திக்-கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக்கை இணைத்து படமெடுக்க பல இயக்குனர்கள் இதற்கு முன் முயற்சித்த போதிலும் சரியான கதை அமையாத காரணத்தால் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. தற்போது பிரபல இயக்குனர் திரு சொன்ன ஒரு கதை இருவரையும் ஆச்சரியப்படுத்தியதால் இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

படத்திலும் தந்தை-மகனாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்கும் வகையில் இருவரும் மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'இவன் தந்திரன்' படத்தை வெளியிட்ட 'கிரியேட்டிவ் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் டைட்டில், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளிவிரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

'குறள்' தலைப்பு படத்தில் தமிழுக்கு அறிமுகமாகும் பிரபல தெலுங்கு நடிகரின் மகன்

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு தற்போது ஆங்கிலப்படம் மற்றும் மணிரத்னம் படம் ஆகியவற்றில் நடிக்க தயாராகி வரும் நிலையில் அவர் இசையமைத்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணைமுதல்வருடன் கமல்-ரஜினி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் திறந்து வைத்து சிவாஜி கணேசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கமல், ரஜினியை கைகுலுக்கி வரவேற்ற ஓபிஎஸ்: பொன்னாடை போர்த்திய அமைச்சர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய மணிமண்டபம் சற்றுமுன் திறக்கப்பட்டது.

கமல் என்னிடம் ரகசியத்தை கூற மறுக்கின்றார். சிவாஜி விழாவில் ரஜினி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தன்னிடம் ரகசியத்தை கூற மறுப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்