'சூர்யா 44' படத்தில் பிரபல அப்பா-மகன் நடிகர்கள்.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,September 09 2024]

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் சூர்யா, பூஜா ஹெக்டே உட்பட இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சூரியன் 44’ திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர் ஜெயராம் நடித்து வருகிறார் என்ற நிலையில் தற்போது அவருடைய மகன் காளிதாஸ் ஜெயராம் இந்த படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே படத்தில் ஜெயராம் மற்றும் அவருடைய மகன் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் நடிக்க இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..