காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய தந்தை: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

காதல் திருமணம் செய்து கர்ப்பிணியான சொந்த மகள் மீது அவரது தந்தையே ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு என்ற பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை காவலர் பாலகுமார் என்பவரது மகள் தீபிகா. இவர் அதே பகுதியை சேர்ந்த சாய்குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதல் தீபிகாவின் தந்தைக்கு பிடிக்காததால் அவர் வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடியேறினார். மேலும் தீபிகாவை கல்லூரி தவிர வேறு எங்கும் போக கூடாது என்று கண்டிஷன் போட்டு அவரை துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சாய்குமாருக்கு போன் செய்து வரவழைத்த தீபிகா அவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து பெங்களூரில் அவருடைய வீட்டில் குடித்தனம் நடத்த தொடங்கினார். இந்த நிலையில் தீபிகா சமீபத்தில் கர்ப்பம் ஆனதாக தெரிகிறது. இதனை அடுத்து தீபிகாவின் வீட்டுக்கு சென்ற அவரது தந்தை பாலகுமார், தன்னுடன் வீட்டுக்கு வந்துவிடுமாறு கூறியுள்ளார். அதற்கு தீபிகா மறுக்கவே ஆத்திரமடைந்த பாலகுமார் அவருடைய முகத்தில் ஆசிட் வீசி உள்ளார். அதை தடுக்க வந்த தீபிகாவின் மாமியார் மற்றும் மூத்த மருமகள் முகத்திலும் ஆசிட்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சாய்குமாரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகுமாரை தேடி வருகின்றனர். ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட தீபிகா மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீ தான் தைரியமான ஆளாச்சே.. இப்போ ஹார்ன் அடி..! ஒலி மாசை குறைக்க மும்பை காவல்துறை செய்த முயற்சி.

இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு இணையாக ஒலி மாசுபாடும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எல்.ஐ.சி பங்குகள் விற்பனை, தனிநபர் வருமான வரிச்சலுகை: பட்ஜெட்டில் மேலும் சில முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை முதல் 2020ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையை பாராளுமன்றத்தில் படித்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனிநபர் வருமான வரிச்சலுகை

TNPSCயா? TNPPSCயா? கமல்ஹாசனின் நச் டுவீட்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் செய்திகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்வாவில் தொடங்கி அல்வாவில் முடிந்த பட்ஜெட்: கமல் கருத்து

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஏறக்குறைய மூன்று மணி நேரம் அவர் தாக்கல்

ஒரே நாளில் பி.எஸ்.என்.எல்லில் இருந்து வெளியேறும் 80,000 ஊழியர்கள்..! இந்தியாவிலேயே முதல்முறை.

எம்.டி.என்.எல் நிறுவனத்திலிருந்தும் 14,378 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் ரூ.40.000 கோடி கடன் வைத்துள்ளன