'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2001-ம் ஆண்டு வெளிவந்தது. இந்த நிலையில் சரியாக இருபது வருடங்கள் கழித்து இந்த படத்தின் ஒன்பதாம் பாகம் வெளிவர உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் எட்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது என்பது தெரிந்ததே. அதற்கு முன்பு ஏழாம் பாகம் 2015ஆம் ஆண்டு வெளியானது என்பதும் அந்த திரைப்படத்தில் நடித்த பால்வாக்கர் எதிர்பாராத வகையில் கார் விபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதி ’பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் ஒன்பதாம் பாகம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் வின் டீசல் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் WWE வீரர் ஜான்சேனாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்கள் தாமதமாக வந்தாலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் உலகம் முழுவதும் இந்த படம் வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The family returns June 25. Only in theaters. #F9 pic.twitter.com/D9klpcvHDk
— #F9 (@TheFastSaga) March 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com