'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்: இந்தியாவில் ரிலீஸ் எப்போது?
- IndiaGlitz, [Tuesday,August 24 2021]
ஹாலிவுட் ஆக்சன் திரைப்படமான ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் 8 பாகங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 9 ஆவது பாகமும் சமீபத்தில் தயார் ஆனது என்பதும் இந்த படம் மே 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு விட்டதாகவும் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 142 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மூன்றாவது வாரம் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
200 முதல் 220 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் தயாரித்த இந்த படம் ஏற்கனவே சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து விட்ட நிலையில் இந்தியாவில் எந்த அளவுக்கு இந்த படம் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.