'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

  • IndiaGlitz, [Wednesday,December 15 2021]

வின் டீசல் உள்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் நடித்த ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் பத்தாம் பாகம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த 2001 ஆம் ஆண்டு ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தின் முதல் பாகம் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி உள்ளது என்பதும் தெரிந்ததே

கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தின் ஒன்பதாம் பாகம் வெளியாகி வசூல் மழை பொழிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் பத்தாம் பாகம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் 10ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி மே மாதம் 19 என அறிவிக்கப்பட்டுள்ளது.

’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ 10ஆம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.