விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது… காட்டத்துடன் உச்சநீதிமன்றம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் 22 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நேற்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலை முழுக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது டெல்லி நெடுஞ்சாலை பகுதிகளில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் டெல்லி பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் முகாமிட்டு இருப்பதால் டெல்லியில் பல சாலைகள் மூடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சாலை மறியல் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும் பேச்சுவார்த்தை நடத்தி பேராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் பொதுநல மனு ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நேற்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அந்த விசாரணையின்போது, “விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது. இருப்பினும் போராடும் முறையை மாற்றி பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறோம். போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கருத்தால் விவசாயிகளின் போராட்ட வடிவத்திற்கு மட்டுமே தீர்வு காண உச்சநீதிமன்றம் முன்வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com