"கரணம் தப்பினால் மரணம்" இங்கு தலை மட்டுமே பாக்கி; விவசாயிகளின் விநோத போராட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜஸ்தானில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தங்களை மண்ணில் புதைத்துக் கொண்டு விநோதமான போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரத்தை அடுத்த நிந்தார் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
ஜெய்ப்பூர் நகர மேம்பாட்டுத் திட்டத்திற்காக பல இடங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஜெய்ப்பூர் அடுத்து 24 கி.மீ தொலைவில் உள்ள நிந்தார் கிராம விவசாயிகள் “ஜமீன் சமாதி சத்தியாகிரகம்” என்ற பெயரில் நிலத்தில குழி தோண்டி தங்களது உடலை மண்ணிற்குள் புதைத்துக் கொண்டு போராடி வருகின்றனர்.
மேலும், அரசு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடும் அளிக்கவில்லை என்றும் விவசாயிகளின் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments